தவிர்க்கப்பட்டவர்கள் : இந்தியாவின் மலம் அள்ளும் மனிதர்கள்

Type
Book
Authors
பாஷா சிங் ( Bhasha Singh )
 
ISBN 13
9788189867867 
Category
சமூகவியல்   [ Browse Items ]
Publication Year
2016 
Pages
400 
Subject
சாதி சமூகம் 
Abstract
சேலை முந்தானையை எடுத்து தலையில் முக்காடு போட்டுக் கொண்ட ஷீலா, சோர்ந்த குரலில் பேசினார் : "என் புருசனுக்கும் வேலையில்லை. சாப்பாட்டுக்கே வழியில்லை. வறுமை கழுத்தை இறுக்குகிறது. நான் திரும்பவும் பீயை அள்ள போக வேண்டியதுதான்" என்று சொல்லச் சொல்லச் கண்ணீர் தாரை தாரையாக வழிந்தது.

நாற்றம் மலத்தில் இருப்பது உடலியங்கியலின் விளைவு. ஆனால் மலத்தை அகற்றும் மனிதர்களைப் பற்றி பிற மனிதர்களின் மனத்தில், கண்ணோட்டத்தில் இருக்கும் எண்ணம், மலத்தை விட நாற்றமுடையதாகும். இந்நிலையில் நாற்றம் மலத்தை அள்ளுபவரின் கைகளில் இல்லை; மாறாக அவரை அருவெறுப்பாகப் பார்ப்பவரின் மனத்தில் இருக்கிறது என்பதை அரசியல்படுத்த வேண்டியுள்ளது.
 
Description
இந்து மதத்தின் கொடூர வடிவமைப்பில், சாதியத்தின் பற்சக்கரங்களில் சிக்கி பலியாகிக் கிடக்கின்ற, மனிதர்களின் மலத்தை அள்ளும் மனிதர்களைப் பற்றிய விரிவான இந்நூல், நம்மிடையே வெறும் குற்ற உணர்வைத் தூண்டுவதோடு மற்றும் நின்று விடக்கூடாது. ஏனெனில் இந்த உணர்வை இந்த நூல் எளிதில் ஏற்படுத்தும். அதற்கு காரணம் இந்த நூலாசிரியரின் அர்ப்பணிப்பு மிகுந்த உழைப்பும், அவருடைய சந்திப்புகளின் வலி நமக்கு அறிமுகமாகும் பல மனிதர்களும், அவர்களின் வாழ்நிலையுமே.

பாஷா சிங் ஆங்கிலத்தில் எழுதிய "Unseen : The Truth about India's Manual Scavengers" நூலின் தமிழாக்கம்  
Number of Copies

REVIEWS (0) -

No reviews posted yet.

WRITE A REVIEW

Please login to write a review.